ராமநாதபுரத்தில் நகர மன்ற கூட்டம்
நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
ராமநாதபுரம் நகர் மன்ற சாதாரண கூட்டம் நகர் மன்ற தலைவர் ஆர் கே கார்மேகம் தலைமையில் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது இதில் ஒரு மனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் அனைத்து திமுக கவுன்சிலர்களும் தங்கள் வார்டுக்குள்ள பிரச்சனைகளை கூச்சல் குழப்பத்துடன் 12 வார்டு உறுப்பினர் ஸ்டாலின் கூறுகையில் கடந்த ஒரு வாரமாக வாதுக்குள் குப்பை வண்டி வரவில்லை என்று கூறினார் நகர் மன்ற தலைவரிடம் கூறினார். இதையெல்லாம் சரி செய்து தருவதாக ஒவ்வொரு முறையும் கூறுவதால் எங்கள் வார்டுகளில் கழிவுநீர் பிரச்சனை மற்றும் சாலை வசதிகள் குப்பை அல்ல கூட நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது என்றும்,
பல்வேறு பிரச்சனைகளை கூறியும் அடுத்த கூட்டத்திற்கு பார்ப்போம் என்று காலம் தாழ்த்துவதால் கவுன்சிலர்கள் மிகவும் வருத்தம் அடைந்தனர் மேலும் 10 வது வார்டு திமுக உறுப்பினர் காளீஸ்வரன் கூறுகையில் பாதாள சாக்கடையில் மேல்பகுதி மூடி இல்லாததால் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் பாதாசாக்கடை கழிவுநீரை அகற்றச் சொல்லியும் மூடிகள் அமைக்க சொல்லியும் பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு அழைந்தும் எந்தவித பயனும் இல்லை என்றார்.பொதுமக்கள் குடிக்கின்ற குடிநீரில் கழிவு நீர் கலந்து சுகாதார கேடு ஏற்பட்டு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும் கிணற்றிலும் பாதாள சாக்கடை தண்ணீர் இறங்குவதால் துர்நாற்றம் ஏற்பட்டு அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றார். நகராட்சி கூட்டம் முடிந்தவுடன் பத்தாவது வார்டை சேர்ந்த நகராட்சி அலுவலகத்திற்கு கூட்டமாக வந்து கையில் கழிவுநீர் கலந்த தண்ணீரை காண்பித்து முற்றுகையிட்டனர் அப்போது செய்தியாளரிடம் கூறிய பொதுமக்கள் எங்கள் வார்டில் சுமார் 2000 பேர் வசித்து வருகின்றனர்.
இதில் சத்திரதெரு இந்திரா நகர், கிழக்கு தெரு, வாணி பட்டினம் ரோடு, பகுதிகளில் உள்ள பைப்புகளில் ஆறு மாதங்களுக்கு மேல் காவிரி கூட்டு குடிநீர் வருவதில்லை குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளம். மேலும் பாதாள சாக்கடை கழிவுநீர் கிணற்றுக்குள் இறங்கி துர்நாற்றம் வீசுவதாகும் தண்ணீர் பாட்டில்களுடன் பத்தாவது வார்டு பொதுமக்கள் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இப்பகுதியில் உள்ள தண்ணீர் கழிவு நீர் கலந்து வருகிறது கிணற்றில் கழிவு நீர் கலப்பதால் புழக்கத்திற்கு கூட பயன் அடைய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது இது பற்றி பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் எந்த விதமான செயல்பாடும் இல்லாததால் வரும் திங்கட்கிழமைக்குள் சரி செய்யாவிட்டால் சென்னை ரோட்டில் அமர்ந்து மிகப் பெரிய மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.