நாய்கள் கருத்தடை மையத்தில் நகர்நல அலுவலர் ஆய்வு
ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதியில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தில் மாநகராட்சி நகர் நல அலுவலர் யோகானந்த் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சி பகுதியில் தெருநாய் தொல்லைகள் அதிகம் உள்ளது. ஒரு சில இடங்களில் தெரு நாய்கள் கடித்ததில் பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நாய் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கவும், நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இதையடுத்து சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலம், 9-வது வார்டுக்குட்பட்ட வாய்க்கால் பட்டறையில் நாய்கள் கருத்தடை மையம் அமைக்கப்பட்டது. அந்த மையத்தில் தெரு நாய்கள் பிடித்து கருத்தடை செய்யப்பட்டு வரப்படுகிறது. அப்படி கருத்தடை செய்யப்படுவதை மாநகராட்சி நகர் நல அலுவலர் யோகானந்த், கவுன்சிலர் தெய்வலிங்கம் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பணியாளர்களிடம் விவரங்கள் கேட்டு அறிந்தனர்.
Next Story