பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

அதியமான் கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், 20 மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் நடந்தது.

அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் பழனியப்பன் முகாமை தொடங்கி வைத்தார். நிலம், வழித்தட தகராறு, குடும்ப தகராறு பணம் கொடுக்கல், வாங்கல் குறித்த மனுக்கள் மற்றும் போலீஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. பெறப் பட்ட 30 மனுக்களில் 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதுதீர்வு காணப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உதவி காவல் ஆய்வாளர் விமல்குமார் உள்ளிட்ட காவலர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Tags

Next Story