கேரள கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.

கேரள கழிவுகளை கொட்ட வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்.

சிறைபிடிக்கப்பட்ட லாரி 

அருமனை அருகே கேரளா கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து மீண்டும் கேரளவிற்கே அனுப்பி வைத்தனர்.

கேரளாவில் இருந்து வாகனங்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து குமரி மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசியமாக கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்பதால் பொதுமக்கள் தாங்களே காத்திருந்து அந்த வாகனங்களை சிறை பிடிக்கின்றனர்.அந்த வகையில் கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு லாரி அருமனை மஞ்சாலுமூடு அருகே வந்தது.

இதுகுறித்து ஏற்கனவே தகவல் கிடைத்த நிலையில் அப்பகுதி மக்கள் ரெடியாக காத்திருந்து அந்த லாரியை சிறைபிடித்தனர். தகவல் கிடைத்ததும் அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர்கங்கைநாதபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.உள்ளிருந்த கழிவுகள் அதிக துற்நாற்றத்துடன் காணப்பட்டதால் அப்பகுதி பஞ்சாயத்து தலைவரை வரவழைத்து கழிவு ஏற்றிவந்த லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்த லாரியை கழிவுகளுடன் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

Tags

Next Story