தானிப்பாடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

தானிப்பாடி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

காவல் நிலையம்

தானிப்பாடி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த விருப்பாச்சி கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த நிலையில் மல்காப்பூர் கிராமத்திற்கு கிணற்றிலிருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் விருப்பாச்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

Tags

Next Story