சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாலை மறியல்

செங்கம் அருகே பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம், கொட்டாவூர் கிராமம் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 300 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி கட்டிடம் பழுதடைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டு தற்போது ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . போலீசாரின் சமரச பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story