எம்.பிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்-சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

எம்.பிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்-சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

சாலை மறியல்

எம்.பிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்-சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை கணபதி பகுதியில் இருந்து சங்கனூர் செல்லும் சாலையில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருக்கு சொந்தமான கட்டிடம் இயங்கி வருகிறது.அந்த கட்டிடத்தில் டாஸ்மார்க் (கடை எண்1638) கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் அந்த டாஸ்மாக் கடைக்கு அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்டங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் அதற்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று திடீரென அந்த கடை முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் மனு அளித்து இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் இவ்வாறு சாலை மறியலில் ஈடுபடக்கூடாது என்று எடுத்துரைத்தனர்.இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்தனர்.அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாஸ்மாக் கடையை அகற்றகோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags

Next Story