ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

ரயில்வே சுரங்க பாதையில்   மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

மழை நீரால் அவதி

அச்சிரபாக்கம் ரயில்வே சுரங்க பாதையில் (Sub-way ) மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சி வண்டி குப்பம் காலனி பகுதிக்கு செல்லக்கூடிய ரயில்வே சுரங்க பாதையில் (Sub-way ) மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வண்டி குப்பம் காலனி பகுதியில் 250-க்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்ல ரயில்வே சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து பெய்த கனமழையால் சுரங்கப் பாதையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்ல அப்பகுதியை சுற்றி வெளியே வர முடியாத நிலையும் தீவு போல் தனியாக தவிக்கின்றனர்.

ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பொழுது மழை நீர் வெளியேறும் வகையில் திட்டமிட்டு கட்டப்படாததால் மழை காலங்களில் இப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே,ரயில்வே துறை நிரந்தரமாக மழைநீர் சூழாத வண்ணம் நிரந்தர பாதை அமைத்து தரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story