திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூர் பகுதியில் எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் அவதி

அவிநாசி, சேவூர், தேவேந்திரன் நகர் பகுதியில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா சேவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட தேவேந்திரன் நகர் பகுதிக்கும் விஐபி கார்டன் குடியிருப்புக்கும் நடுவே. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து அடி உயரத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. இதனால் தேவேந்திரன் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தும் வகையில் இந்த சுவர் அமைந்துள்ளதால்,பிரதான சாலைக்கு வருவதற்கு எளிதாக உள்ள பஞ்சாயத்து சாலைகளை பயன்படுத்துவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது .அரை கிலோ மீட்டர் வரை சுற்றியும் சுவற்றை ஏறி இறங்கியும் தங்களது அன்றாட பணிகளை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் ஆட்சியரும் கடந்த நவம்பர் மாதம் சுவற்றை இடிக்க உத்தரவு பிறப்பித்த நிலையில், தொடர்ந்து அதனை அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளிக்கின்றனர் அப்பகுதி மக்கள் மேலும் தேவேந்திரன் நகர் பகுதி மக்கள் நியாய விலை கடைக்கு செல்லவும் பிரதான சாலைக்கு செல்லவும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றவும் விஐபி கார்டன் வழியாக பயணிப்பது எளிதாக அமைகிறது.

ஆனால் தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் சுவற்றை ஏறி இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இளைஞர்கள் பெண்கள் என வயது வித்தியாசம் இன்றி சுவற்றை ஏறும் அவல நிலையையும் காணமுடிகிறது . ஆட்சியர் உத்தரவிட்ட நிலையிலும் சுவர் அகற்றப்படாதது , உள்நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாக சந்தேகத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர் அப்ப்குதி மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் கேட்டபோது ஆட்சியர் உத்தரவு விட்டு இருக்கின்ற நிலையில் ஒரு சிலர் வழக்கை கொடுத்துள்ளதால் அரசு வழக்கறிஞரின் கருத்துருவுக்காக காத்திருப்பதாகவும் அவர் கருத்துரு அளித்தவுடன் சுவர் அகற்றப்படும் என உறுதி அளித்தார்

Tags

Next Story