பிளக்ஸ் பேனர் வைக்க கட்சிகளுக்கிடையே மோதல்

திருப்பூரில் பேருந்து நிறுத்தம் அருகில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் பாஜ., மற்றும் எஸ்டிபிஐ., கட்சியினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

திருப்பூர் உஷா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் பஜாக மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது Vo கடந்த சில நாட்கள் முன்பு முதலே எஸ்.டி.பி.ஐ சார்பாக மதுரையில் நடைபெறும் மாநாடு தொடர்பாக உஷா தியேட்டர் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பேனரை அகற்றும் படி போலீசார் தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீர் என்று பஜாக சார்பில் அயோதி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான பேனர் அந்த இடத்தில் பாஜக சார்பில் வைக்கப்பட்டது. இதை கண்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பாஜக பேனரை அகற்ற வேண்டும் என போராட்டம் நடத்திய நிலையில் பாஜகவின் பேனர் அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

அதை தொடர்நது மீண்டும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் அங்கு மீண்டும் பேனர் வைக்கப்பட்டது. உடனடியாக பாஜகவினர் தங்கள் பேனரும் அதே இடத்தில் வைக்க வேண்டும் அல்லது இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் சி டி சி கார்னர் பகுதியில் தங்கள் பேனரை வைப்போம் என பிளக்ஸ் பேனர் உடன் சிடிசி கார்னர் வரை பேனருடன் பேரணியாக சென்றனர். அதை தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்ப்பட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதனுடைய எஸ்டிபிஐ கட்சியினரின் பேனரை கழட்ட முயன்ற நபர் ஒருவரை எஸ்டிபிஐ கட்சியினர் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையர் வனிதா தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளின் பேனரும் உடனடியாக அகற்றப்பட்டது. போலீசார் தரப்பில் கூறுகையில், இரண்டு தரப்பினருக்கும் பேனர் வைக்க அனுமதி வழங்க வில்லை என்றும், அதானல் தான் தற்போது இந்த பேனர் அகற்றப்பட்டது எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story