வாணியம்பாடியில் பாஜகவினர் இரு தரப்பினரிடையே மோதல்

வாணியம்பாடியில் தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் பாஜகவினர் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொழில் போட்டியாக ஏற்பட்ட பிரச்சனையில் பாஜகவினர் இரு தரப்பினரிடையே மோதல். அரசு மருத்துவமனையில் காவல்துறை கண்முன்னே இருதரப்புகளிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி பகுதியில் வசித்து வருபவர் பிரிதீப். இவர் பாஜக மாவட்ட இளைஞரணி துணை தலைவராக உள்ளார். இவர் பெருமாள் பேட்டை பகுதியில் லாரி சர்வீஸ் மற்றும் லாரி பாடி கட்டும் தொழில் செய்து வருகிறார். பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் சதிஷ் என்பவர் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார்.

இவர்களுக்கு இடையில் தொழில் போட்டு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சதிஷ் உறவினரான கோபிநாத்(பாஜக பிரமுகர்)என்பவர் பிரதீப் லாரி ஓட்டுனர் கோபாலிடம் உன்னுடைய முதலாளி லாரி படி சரியாக கொடுக்கின்றாரா என்று கேட்டுள்ளார். இதனை கேட்ட பிரதீப் உங்கள் தொழில் வேறு, எங்கள் தொழில் வேறு. ஏன் லாரி ஓட்டுனரை குழப்பம் செய்கிறீர் என்று கேட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோபிநாத் என்பவருக்கு ஆதரவாக ரவி, சதிஷ், ஆனந்தன் உட்பட 10 பேர் பிரதீப் என்பவரை கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதனை பார்த்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த திருப்தி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விளக்க சென்ற போது பிரதீபுக்கு ஆதரவாக வந்தவர்கள் என்று நினைத்து அவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வாணியம்பாடி நகர போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அப்போது காவல் துறையினர் முன்பாக பிரதீப்பிறகு ஆதரவாக வந்த கோபால கிருஷ்ணன் மீது தாக்கியுள்ளனர். இருதரப்பினர் 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story