இரு தரப்பினர் மோதல் - 3 பேர் கைது

இரு தரப்பினர் மோதல் - 3 பேர் கைது

காவல் நிலையம் 

தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தில்இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பும் கத்தியால் குத்திக்கொண்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வீராச்சிமங்கலம் பகுதியில் கடந்த 23ஆம் தேதி வீராச்சிமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் பாரதிராஜா மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் முருகானந்தம் வயது 26. இருவருக்கும் முருகன் கோவில் காவடி சம்பந்தமாக இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். இதில் பாரதிராஜா என்பவரை முருகானந்தம் கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் முருகானந்தம் என்பவரை பாரதிராஜா கம்பியால் அடித்ததில் முருகானந்தம் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது சம்பந்தமாக பாரதிராஜா உடன் பிறந்த கருப்புசாமி என்பவரது மகன் பூபதி மற்றும் அவரது நண்பர்கள் ஆன காளிதாஸ் மற்றும் விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து முருகானந்தம் என்பவரது உறவினரான தாமரைக்கண்ணன் என்பவரை கத்தியால் குத்தினர்.

காயமடைந்த தாமரைக்கண்ணன் என்பவர் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது பூபதி மற்றும் காளிதாஸ் விக்னேஷ் ஆகியோர் வீட்டிற்கு வந்து காவல் நிலையத்திலிருந்து உன்னை அழைக்கிறார்கள் என்று கூறினர் அதன் பிறகு தாமரைக்கண்ணன் என்பவர் வீட்டுக்கு வெளியே வந்த போது பாரதிராஜாவை முருகானந்தம் உடன் சேர்ந்து கொண்டு கத்தியால குத்து நீங்களா இப்போ உன்னை நான் கத்திய குத்திக் கொள்ளாமல் விடமாட்டேன் என்று கையில் வைத்திருந்த கத்தியால் தாமரைக்கண்ணன் என்பவரை பல இடங்களில் குத்தினர்.

இதற்கு காளிதாஸ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தாமரைக்கண்ணன் என்பவரை பிடித்துக் கொண்டனர் பூபதி என்பவர் கத்தியால் குத்தினார். அவர்கள் தாத்தா சத்தம் போடவே அங்கிருந்து குற்றவாளிகள் தப்பித்து சென்றனர். மேலும் படுகாயம் அடைந்த தாமரைக்கண்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலை சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தாமரைக்கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி மங்கலம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் பூபதி வயது 22, அதேபோல் ஆறுமுகம் மகன் காளிதாஸ் வயது 28, சண்முகம் மகன் விக்னேஷ் வயது 30 ஆகியோரை தாராபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரே ஊரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரு தரப்பும் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தாராபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story