பைக்கில் வேகமாக வந்தவர்களை தட்டி கேட்டதால் மோதல்
பைல் படம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள கோடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கந்தவேல் (23), குணா (24), பாலமுருகன் (24), ஹரிஹரன் (23) ஆகிய நால்வரும் கோடியம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனராம், அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் கோடியம்பாளையத்தை சேர்ந்தவர்களான மணவாளன் (17), சங்கிலி என்கிற ஊருணி (18), சுந்தரம் (46) ஆகிய மூவரும் வேகமாக சென்றவர்களை, மெதுவாக செல்லுமாறு கூறியதாகவும், இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதில் மணவாளன் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குணா என்பவரை வலது பக்கம் மார்பில் குத்தியுள்ளார்.
இதனை தடுக்க வந்த மோகனசுந்தரம் (60) என்ற முதியவரை தலையில் வெட்டியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர், மேலும் பாலாமுருகன், ஹரிஹரன் கந்தவேல் ஆகிய மூவரையும் கை மற்றும் முதுகுப் பகுதியில் கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்தியதில் மூவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையிலும், இதில் பலத்த காயமடைந்த மோகனசுந்தரம் (60) நாமக்கல் அரசு மருத்துவமனையிலும் குணா (24),சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கோடியம்பாளையம் சேர்ந்த பெருமாள் மகன் கந்தவேல் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுந்தர மகன் மணவாளன் (17) சண்முகம் மகன் சங்கிலி என்கிற ஊரணி (18) தருமலிங்கம் மகன் சுந்தரம் (46) ஆகிய மூன்று பேர் மீது தொட்டியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.