திருப்பத்தூரில் கோஷ்டி மோதல் - 7 பேர் மீது வழக்கு

திருப்பத்தூரில் கோஷ்டி மோதல் - 7 பேர் மீது வழக்கு

வழக்கு பதிவு

திருப்பத்தூர் அடுத்து அனேரி பகுதியில் கோஷ்டி மோதல் 7 பேர் மீது வழக்கு இருவர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்துார் அடுத்த வெங்களாபுரம் அருகே அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ராகுல்(20). இவர், திருவண்ணாமலை மெயின் ரோடு அனேரி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு அங்கிருந்து வெங்களாபுரம் நோக்கி சென்றார். அப்போது அனேரி பகுதியை சேர்ந்த பாஸ்கர்(31). என்பவர், தனது பைக்கில் நேர் எதிரே திருப்பத்துார் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது இருவர் பைக்கும் நேருக்குநேர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர், ராகுலை கண்டித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ராகுலின் தந்தை சிவக்குமார் மற்றும் பாஸ்கரின் சகோதரர்கள் அங்கு வந்தனர். அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து அவர்கள் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் கிராமிய போலீசார் ராகுல் தரப்பில் ராகுல் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீதும், பாஸ்கர் தரப்பில் பாஸ்கர் மற்றும் அவரது சகோதர் வேலன் உள்ளிட்ட மூன்று பேர் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சிவகுமார் மற்றும் பாஸ்கர் இருவர் கைது செய்யப்பட்டனர்

Tags

Next Story