நீலகிரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு:101மாணவர்கள் ஆப்சென்ட்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி, கடந்த 22ம் தேதியுடன் நிறைவடைந்தது. பிளஸ்1 மாணவர்களுக்கான தேர்வு நேற்று நிறைவு பெற்றது.
இந்தநிலையில் தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், இன்று தொடங்கின. இந்த தேர்வு, வருகிற ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 957 மாணவர்கள் தேர்வு எழுத தகுதி அடைந்தவர்களாக இருந்தனர். இந்த நிலையில் இன்று நடந்த தேர்வில் 6856 பேர் கலந்து கொண்டனர். 101 பேர் வரவில்லை. இதே போல் தனித் தேர்வர்களில் 147 பேர் எழுத விண்ணப்பித்து 133 பேர் கலந்து கொண்டனர். நீலகிரியில் முதல் நாள் தேர்வு எழுத கலந்து கொண்ட 279 மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது.
தேர்வு அறைகளில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
