ரூ.94.70 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள் - முதல்வர் திறப்பு.

ரூ.94.70 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள்  - முதல்வர் திறப்பு.

கட்டிட திறப்பு 

நீலகிரியில் ரூ.94.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டத்தில், உதகை, கோத்தகிரி ஆகிய ஊராட்சிகளிலும், ஜெகதளா பேரூராட்சியிலும் ‘குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்” ரூ.94.70 இலட்சம் மதிப்பில் 2 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 3 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்த வைத்தார். அதனை தொடர்ந்து மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் இத்தலார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி வைத்து, வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார்.

Tags

Next Story