மனைவி பிரிந்ததால் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு  தற்கொலை

மனைவி பிரிந்ததால் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு  தற்கொலை
தற்கொலை
நாகர்கோவிலில் மனைவி பிரிந்ததால் தூய்மை பணியாளர் தூக்கு போட்டு  தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம், மதுசூதனப் பெருமாள் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (35).இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது மனைவிக்கு மிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சுரேஷ் மனம் உடைந்து குடிப்பழக்கத்திற்கு ஆளான சுரேஷ் மன உளைச்சல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இது குறித்து தனது தாயாரிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதற்கிடையில் சுரேஷ் வீட்டின் சமையலறையில் உள்ள உத்திரத்தில் வேட்டியால் தூக்கிட்டு, பிணமாக தொங்கியுள்ளார். இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சுரேஷ் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தாயார் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story