நீலகிரி பகுதியில் தூய்மை விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் அருகே, நீலகிரி ஊராட்சியில், திருவள்ளுவர் குடியிருப்பு பகுதியில், திருவள்ளுவர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மழைக்காலத்தில் கொசுக்கள் பெருகி நோய்கள் பரவாமல் தடுக்கும் விதமாகவும், சுகாதாரத்தை பேணும் வகையிலும் தூய்மை விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
கிரீண்லேண்ட் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள், குடியிருப்பு மக்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து தேங்கிக் கிடந்த குப்பைகள், டயர்கள் அகற்றப்பட்டு, வளர்ந்திருந்த புதர்கள் வெட்டி அகற்றப்பட்டது. நிகழ்ச்சியில், குடியிருப்போர் சங்கத் தலைவர் மதியரசு, செயலாளர் தனுஷ்கோடி, பொருளாளரும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலருமான பன்னீர்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.