அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி !!

அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி !!

கலெக்டர் பிருந்தாதேவி

அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணி இதனை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்ததால் குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் பள்ளி வளாகத்தில் சிதறி கிடந்தன.

இதனால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த சில நாட்களாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வகுப்பறைகளுக்கு வண்ணம் தீட்டுதல், இருக்கைகள், நாற்காலி, டேபிள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

சேலம் மாநகராட்சி மணக்காடு காமராஜர் அரசு–ெபண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் பள்ளிக்கூடத்தில் உள்ள குடிநீர் தொட்டி, மைதானம், கழிவறை ஆகியவற்றை தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:- கோடை விடுமுறை முடிந்து 2024-2025-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 1,567 அனைத்து வகை அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 2,396 செயல்பட்டு வருகின்றது.

பள்ளிகள் திறக்கப்படும் தேதிக்கு முன்னர், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளில், மாணவ, மாணவிகள் புத்துணர்வுடனும், சுகாதாரம் மற்றும் தூய்மையான சூழலிலும் கல்வி பயில ஏதுவாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவும்,

Tags

Next Story