தீபத்திருவிழாவை முன்னிட்டு மாடவீதி மற்றும் கிரிவலப்பாதையில் தூய்மை பணி
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா- 2023 முன்னிட்டு மாடவீதி மற்றும் கிரியலப்பாதை ஒட்டுமொத்த தூய்மை பணி குறித்து நேற்றுஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாடவீதி மற்றும் கிரிவலப்பாதை முழுமையான தூய்மைபணி இன்று காலை 07.00 மணிக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஒட்டுமொத்த தூய்மை பணியினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செங்கம் சந்திப்பில் புதியதாக திறக்கப்பட்ட காவல் நிலையம் அருகில்) துவக்கி வைக்க உள்ளார். மேற்படி ஒட்டுமொத்த தூய்மை பணிக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்துநேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தூய்மை பணிக்காக கிரிவலப்பாதை15 ஆக பிரிக்கப்பட்டுள்ளது எனவும், வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைதுறை, இந்து சமய அறநிலையத் துறை காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள்.தனியார் அமைப்புகள் ஒருங்கிணைந்து தூய்மை பணியினை மேற்கொள்ள உள்ளனர் எனவும் இப்பணியில் 3000 எண்ணிக்கையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கூடுதல்ஆட்சியர் (வளர்ச்சி) ஆரிஷப், மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் வ.வே.கம்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, இணை ஆணையர் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஜோதி, நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி, அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.