பஸ் நிலையத்தில் அதிக மது குடித்த துப்புரவு தொழிலாளி சாவு

பஸ் நிலையத்தில் அதிக மது குடித்த துப்புரவு தொழிலாளி சாவு
X
மரணம் 
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அளவுக்கு அதிகமாக துப்புரவு தொழிலாளி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்பவர் பால்ராஜ் (32). இவர் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்தவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது குடிக்கும் பழக்கம் உண்டு.

நேற்று காலையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் வைத்து மது குடித்துள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கு ஏறி, மயங்கி கிடந்தார். சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story