தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி முன்பு போராட்டம் !
போராட்டம்
தூய்மை பாரத வாகன ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படாமல் சம்பளம் பிடித்து செய்வதை கண்டித்தும் இ எஸ் ஐ, பி எப், உள்ளிட்ட பிடித்தம் செய்யப்பட்ட பண பலன்களை அடங்காததை கண்டித்து 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதுடன் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை காவல்துறை குவிப்பு தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் சுமார் 1200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 200 தூய்மை வாகன ஓட்டுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனமான அவர் லேண்ட் என்ற நிறுவனத்தின் கீழ் இந்த ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல் மிகக் குறைவான ஊதியத்தை மட்டுமே தனியார் நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் ஊழியர்களின் பெயரில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ பிஎப் உள்ளிட்ட பண பலன்களை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு தரப்பிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனம் தூய்மை பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துவதற்கும் உள்ளூர் தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை தூய்மை பாரத வாகன ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுனர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்ததை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி இரண்டு நுழைவு வாயில்களையும் காவல்துறையினர் யாரும் உள்ளே நுழையாதபடி தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
Next Story