குமாஸ்தா குத்திக் கொலை!
தூத்துக்குடி குரூஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். பால்ராஜ் நேற்று இரவு வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலை மத்திய பாகம் காவல் நிலையம் அருகே கிரேட் காட்டன் சாலையில் உள்ள ஒரு பேட்டையில் பால்ராஜ் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தியபாகம் காவல்துறையினர் பால்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பால்ராஜிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதால் நண்பர்களுடன் மது குடிக்க சென்ற இடத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பால்ராஜை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை மத்திய பாகம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் வக்கீல் குமாஸ்தா குத்தி கொலை உள்ளிட்டதொடர் கொலை நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.