கோடை கால பயிற்சி முகாமின் நிறைவு விழா

X
கோடைகால பயிற்சி நிறைவு
திண்டுக்கல் விடியல் கலையகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல் விடியல் கலையகத்தின் 7ம் ஆண்டு கோடை கால பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு,அருட்சகோதரி பாத்திமா முன்னிலை வகித்தார். விடியல் கலையக நிறுவனர் வெண்ணிலா வரவேற்றார். அருட்சகோதரி அந்தோணி, தலைமை வகித்தார். கோடை கால பயிற்சி முகாமில் கீபோர்ட், வயலின், சிலம்பம், பரதம் போன்ற வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக எடிட்டர் மணிகண்ட பிரபு சான்றிதழ் வழங்கினார்.விடியல் கலையக பயிற்றுனர் போஷி நன்றியுரை கூறினார்.
Next Story
