உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த அரசு பள்ளி மைதானம் மூடல்

உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த அரசு பள்ளி மைதானம் மூடல்

பள்ளி நிர்வாகம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள நோட்டிஸ் 

சங்கரன்கோவில் அருகே உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த அரசு பள்ளி மைதானம் மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி நூற்றாண்டு கடந்த பாரம்பரிய மிக்க பள்ளி ஆகும். இந்த பள்ளி மைதானத்தில் பல ஆண்டுகளாக சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் ராணுவத்தில் பணிக்கு சேர பயிற்சி செய்பவர்கள் இந்த மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இங்கு உடற்பயிற்சி மேற்கொண்டு தேர்வுகளில் பங்கேற்றவர்கள் ஏராள மானவர்கள் காவல்துறை மற்றும் ராணு வத்தில் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி மைதானத்தில் இரவு நேரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் பள்ளி மைதானத்திற்குள் வெளியாட்கள் நுழைய அனுமதி மறுத்து பள்ளி கதவு மூடப்பட்டது. காலை நேரத்திலும் கதவு பூட்டப்பட்டு 8.30 மணிக்கு மேல் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்ளும் வயதான வர்கள், இளைஞர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் உடற்பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் வேதனை அடைந்தனர். மேலும் சாலை பகுதிகளில் நடை பயிற்சி உடற்பயிற்சி மேற்கொண்டால் விபத்து அபாயம் உள்ளதால் பள்ளி மைதானத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது மிகுந்த பாதுகாப்பாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.

Tags

Next Story