மக்களுடன் முதல்வர் முகாம்

திருச்சி கே.கள்ளிக்குடி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் கே கள்ளிக்குடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகாடமி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் முகம் இன்று நடைபெற்றது.

இந்த முகாமை கே கல்லுக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார் ‌ இந்த முகாமில் பொதுமக்கள் மனுக்கள் எழுதிக் கொடுப்பதற்கு அதற்கான ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் இன்று நடைபெற்ற.இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக ஊராட்சி மற்றும் ஊராட்சி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்கள் உள்ளிட்ட துறைகளை சார்ந்த குறைகளை மனுக்களாக எழுதி பொதுமக்கள் வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story