மக்களுடன் முதல்வர் முகாம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மனுக்களை பெற்றார்

மக்களுடன் முதல்வர் முகாம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மனுக்களை பெற்றார்

மக்களுடன் முதல்வர் என்ற முகாமில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மனுக்களை பெற்றார்  

மக்களுடன் முதல்வர் என்ற முகாமில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மனுக்களை பெற்றார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழக தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னிமலையில் மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்கள் மனுக்கள் வழங்கியதை பார்வையிட்டார். இம்முகாமானது டிசம்பர் 18 முதல் வருகின்ற ஜனவரி 6 வரை நடைபெறவுள்ளதாகவும் , இம்முகாமில் , வருவாய்த்துறை , தமிழ்நாடு மின்சார வாரியம் , சமூக நலத்துறை , உள்ளாட்சித்துறை , கல்வி உதவித் தொகை, தொழில் பயிற்சி உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த மனுக்களை முகாம் நடைபெறும் முகாம்களில் தனி நபர்கள் தங்களது குறைகள் தொடர்பாக மனு செய்து பயன்பெறுமாறு அமைச்சர் சாமிநாதன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மக்களுடன் முதல்வர் முகாமில் மனுக்களை வழங்கிய 6 நபர்களுக்கு உடனடி நடவடிக்கையாக, வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கல்வி உதவித்தொகைக்கான சான்றிதழ், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்டவை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story