செய்யாறில் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம்

செய்யாறில் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் முகாம்

எம்எல்ஏ ஓ ஜோதி தொடங்கி வைத்தார்.
செய்யாறில் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் முகாமினை எம்எல்ஏ ஒ.ஜோநி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பங்களா தெருவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மக்களுடன் முதல் திட்ட முகாம் நடந்தது நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கினார். ஆணையாளர் குமரன் வரவேற்றார். நகர திமுக செயலாளரும் அப்பகுதி கவுன்சிலருமான வழக்கறிஞர் கே.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பேசுகையில், தமிழக அரசின் ஒவ்வொரு திட்டங்களும் ஒவ்வொரு வீட்டிலும் போய் சேர வேண்டும் என்பதற்காக மக்களின் தேவைகளை அறிந்து மக்களுக்கான ஆட்சி செய்து வருகிறார் திராவிட மாடல் ஆட்சி நாயகன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். எந்த ஒரு தேவைக்காகவும் அரசு அலுவலகங்களை நாடுவதுக்கு பதிலாக ஒரே இடத்தில் அனைத்து அலுவலர்களையும் ஒன்று கூட்டி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இது போன்ற முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். முகாமில் வருவாய், நகராட்சி, மின்சாரம், போலீஸ், பொது சுகாதாரம் உள்ளிட்ட 13 துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் (வெம்பாக்கம்) எம்.தினகரன், (செய்யாறு) ஆ.ஞானவேல், நெசவாளர் அணி அமைப்பாளர் என்.சம்பத், அரசு அதிகாரிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story