எடப்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்கம்.

எடப்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது

மக்களுடன் முதல்வர் முகாமை எடப்பாடி தனி தாசில்தார் வாசுகி தலைமையில் எடப்பாடி நகரமன்ற தலைவர் பாஷா மற்றும் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் தொடங்கி நடைப்பெற்றது.

இம்முகாமில் வருவாய்த்துறை,ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை,மின்வாரியம்,காவல்துறை,வீட்டு வசதி வாரியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம்,ஊரக வளர்ச்சித்துறை உட்பட்ட அரசு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு துறையைச் சார்ந்த மக்களின் கோரிக்கைகளுக்கு அந்தந்த துறைகளில் உள்ள அலுவலர்கள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story