மல்லசமுத்திரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மல்லசமுத்திரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

நலத்திட்ட உதவிகள் 

மல்லசமுத்திரத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 235 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகலாய் அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
மல்லசமுத்திரம் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,சுகந்தி வரவேற்றார். கடந்த டிச.26ல் மல்லசமுத்திரத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டமுகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் 235 பயனாளிகளுக்கு, 1கோடியே51லட்சத்து89ஆயிரத்து218 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள்துறை, வருவாய், கூட்டுறவு, டவுன்பஞ்சாயத்து, தமிழ்நாடு மின்பகிமானம், தொழிலாளர்நலன், சமூகபாதுகாப்புதிட்டம், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். தி.மு.க.,மேற்கு மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், தி.கோடு எம்.எல்.ஏ.,ஈஸ்வரன் மற்றும் அனைத்துதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story