பள்ளிபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பள்ளிபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

முகாமில் மனு அளித்த மக்கள்

பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில், பள்ளிபாளையம் நகராட்சி சார்பில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது . இதில் சுமார் 13 துறைகளுக்கான சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதில் ஏற்கனவே இரண்டு முறை மக்களுடன் முதல்வர் முகாம் ஜீவி மஹால் திருமண மண்டபம், மற்றும் கண்டிப்புதூர் அரசு பள்ளியில் என நடைபெற்ற நிலையில், மூன்றாவதாக நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த முகாமில் , பள்ளிபாளையம் நகராட்சி பகுதியை சேர்ந்த 12,15,16, 17,18, 19,20 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ் ,வருமானச் சான்றிதழ், மின் இணைப்பு பெயர் மாற்றுதல், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள், சுய தொழில் வங்கி கடன், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் ,சாலையோர வியாபாரகளுக்கு கடன் திட்டம் உள்ளிட்ட பல சேவைகளுக்கு, மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.

பொது மக்களின் தேவைக்காக, குடிநீர் வசதி, மாற்றத்திறனாளிகள் பயன்படுத்தும் நாற்காலி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமில் நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர், நகராட்சி ஆணையாளர், நகராட்சி பொறியாளர்கள், காவல்துறையினர், அரசுத்துறை அதிகாரிகள் ,தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், சிஎஸ்ஐ இ பொது சேவை மையம் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story