பெரம்பலூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்டம் 3-வது நாளாக நடைபெற்றது

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் தங்களது குறைகளையும், தேவைகளையும் அதிகாரிகள் இருக்கும் அலுவலகத்திற்கு வந்து மனுவாக கொடுத்து தீர்வு பெறுவதை தவிர்த்து, அதிகாரிகளே பொதுமக்களை அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு தீர்வு கண்டிடும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு சென்று அனைத்து துறை சார்ந்த மனுக்களை பெற்று அவர்களுக்கு தீர்வளிக்க வேண்டும். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதன் முறையாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் டிசம்பர் 18 ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டம் துவங்கியது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி பெரம்பலூர் சங்கு பேட்டை உட்பட்ட பகுதி மக்கள் பயன் பெரும் வகையில் 5,6,18,19மற்றும் 20 வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில்

அப்பகுதியில் உள்ள முத்து கோணார் திருமண மண்டபத்தில் 3.வது நாளாக முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார், இதில் வருவாய் துறை, வேளாண் துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை என அனைத்து துறையின் சார்பில் அலுவலர்கள் நேரில் பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்த மனுவினை பெற்றனர். அவற்றில் பலவற்றிற்கு உடனடி தீர்வும், பல மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

. இந்த முகாமில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து 200 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணி ஆட்சியாளர் கார்த்திகேயன்,நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் நகராட்சி துணைத் தலைவர் ஹரி பாஸ்கர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story