திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

முகாமில் பங்கேற்றவர்கள்

திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் முகாம்! மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெரும் முகாம்! மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டை தற்கா தெரு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது‌.

இதனை தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மின்சார துறை,வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை, கூட்டுறவுத்துறை, ஆதிதிராவிடர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உள்ளிட்ட துறை சார்பாக மனுக்கள் பெரும் முகாம் நடைபெற்றது அப்போது திருப்பத்தூரில் உள்ள தற்காதெரு 7.8.9.10.11,12, 13,23, உள்ளிட்ட வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தங்களது தேவைகள் குறித்து மனு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது

இன்று முகாம் நடைபெற்ற ஒவ்வொரு பிரிவுகளில்சென்று மனுவினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லத்தம்பி மற்றும் சார் ஆட்சியர் பானு. வட்டசியர் சிவப்பிரகாசம் மாவட்ட ஆவின் பால் தலைவர் எஸ் ராஜேந்திரன். நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு,நகர மன்ற தலைவர் சங்கிதா வெங்கடேஷ். நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story