மக்களுடன் முதல்வர் திட்டம்

நீலகிரியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனு அளித்தனர்.

பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்ந திட்டம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி துவங்கியது. இந்த முகாம் வருகிற ஜனவரி 6-ந் தேதி வரை அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தற்போது வரை ஆர்வமுடன் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வருவாய்த்துறையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தற்போது மனு கொடுத்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த முகாம்கள் மூலம் சுமார் ஒன்பதாயிரம் மனுக்கள் வாங்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் மக்களுடன் முதல்வர் திட்டமானது இன்று நெல்லியாளம் நகராட்சியில் வார்டு எண் 1,2,3,4,10,11 ஆகிய பகுதி மக்களுக்கு உப்பட்டி சேலக்குன்னா ரோடு, ஐஸ்வர்யா திருமண மண்டபத்திலுயம் கீழ்குந்தா பேரூராட்சியில் மஞ்சூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைப்பெற்று வருகிறது. இதேபோல் நாளை (சனிக்கிழமை) குன்னூர் நகராட்சியில் வார்டு எண் 7,8,9,10,21,22,23,24 ஆகிய வார்டுகளுக்கு சிம்ஸ்பார்க் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகம், மற்றும் ஓவேலி பேரூராட்சியில் சூண்டி பாரதி நகர் சமுதாயகூடத்திலும் நடைப்பெற உள்ளது. .

Tags

Read MoreRead Less
Next Story