மக்களுடன் முதல்வர் திட்டம்; 545 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டையில் நடந்த 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 545 மனுக்கள் பெறப்பட்டன.

புதுக்கோட்டை: பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றடையும் வகையில் 'மக்களுடன் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 18ம் தேதி கோவையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமி ழகம் முழுவதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி புதுகை மாவட்டத்தில் புதுகை, அறந் தாங்கி நகராட்சிகள் மற்றும் ஆலங்குடி, பொன்னமராவதி பேரூராட்சிகளில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பு

துக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 24,25,36,37,38 ஆகிய வார்டுகளுக்கான சிறப்பு முகாம் வைரம் மெட்ரிக்குலேசன் மேல்நி லைப்பள்ளியிலும், அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 வரையிலான வார்டுகளுக்கான முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நேற்று நடந்தது. முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத் தம் 545 மனுக்கள் பெறப்பட்டன. இத்தகவலை கலெக்டர் மெர்ஸி ரம்யா தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story