மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

தர்மபுரி, அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம், 21/12/2023. மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் தர்மபுரி மாவட்டம் அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் தலைமை வகித்தார், துணைத்தலைவர் சூர்யாதனபால், பேரூராட்சி உறுப்பினர் முல்லைரவி ஆகியோர் முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் வில்சன்ராஜசேகர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தார். முகாமில் வருவாய்த்துறை, மாற்று திறனாளிகள் துறை கூட்டுறவுத்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தொழிலாளர் நலத்துறை, நகர்புற மின்வாரியம், உள்ளிட்ட துறைகளின் சார்பில் மனு பதிவுகள் செய்யும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ன வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் கனிமொழி, தனி வட்டாட்சியர் சின்னான்,பேரூராட்சி செயல் அலுவலர் ம.விஜயசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story