காங்கேயத்தில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா

காங்கேயம் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..

திருப்பூர் மாநகர் மாவட்டம் தெற்கு ஒன்றியம் காங்கேயம் திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கேயம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு‌ இடங்களில் இன்று காலை முதல் பிறந்த நாள்‌விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே. சிவானந்தன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பின் அமைப்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் காங்கேயம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் காங்கேயம் பேருந்து நிலையம் திருப்பூர் சாலை, படியூர், சிவன்மலை கரூர் சாலை உட்பட ஏராளமான பகுதிகளில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்கள்,

பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் திமுக கட்சி சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story