புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர்

புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர்

கோக்கலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.40.60 லட்சம் மதிப்பில் புதிய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோக்கலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.40.60 லட்சம் மதிப்பில் புதிய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கோக்கலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அட்மா குழு தலைவர் திரு. எம்.தங்கவேல் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார் கோக்கலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கந்தசாமி,வட்டார வளர்ச்சி அலுவலர் M.K.பிரபாகரன் , வட்டார கல்வி அலுவலர் வெங்கடாசலம் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி ஆசிரியர்கள் கோமதி மலர்விழி பத்மா வட்டார பொறியாளர் சங்கர்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, திமுக கிளைக் கழக செயலாளர் பழனியப்பன், பிரபாகரன்,சரவணன், வீரமுத்து, குழந்தைவேல், சதீஷ்குமார்,பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு இந்த விழாவினை சிறப்பித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story