ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்திற்குட்பட்ட 57 வது வார்டு வீரபாண்டி பகுதி பலவஞ்சிபாளையத்தில் 15-வது மத்திய நிதி குழு மான்யம் 2022-23 கீழ் ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்.

உடன் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மாநகர நல அலுவலர் மரு. கௌரிசரவணன், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், சுகாதார குழு தலைவர் 57வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவிதா,சுகாதார அலுவலர் முருகன், 57வது வார்டு செயலாளர் நேதாஜி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story