கோவில் திருப்பணிக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டிய முதல்வர்

தர்மபுரி மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு புதியதாக ஆணையாளர் அலுவலக கட்டிடத்திற்கு கட்டுமான பணிக்கு 1.50 கோடி மதிப்பில் பணியை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் சபரிமதி மற்றும் உதவி ஆணையாளர் உதயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA., முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் தர்மபுரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கௌதமன் மற்றும் உறுப்பினர்கள் அன்பழகன், துரை, மாலா, மற்றும் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி மாது மாவட்ட பொருளாளர் தங்கமணி நகர கழக செயலாளர் நாட்டான் மாது,ஒன்றிய கழக செயலாளர் KSR சேட்டு, மடம் முருகேசன் மற்றும் அறநிலை துறை அலுவலர்கள், அரசு அதிகாரிகள், நகர நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story