அரசு சார்பில் புதிதாக பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய பள்ளி கட்டடம் திறப்பு
புதிய பள்ளி கட்டடம் திறப்பு
முதலமைச்சரால் திறக்கப்பட்ட பள்ளி கட்டடத்தில் எம்எல்ஏ அசோக்குமார் குத்து விளக்கு ஏற்றினார்.

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே இருக்கும் கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 29.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் பள்ளி வகுப்பறையை பார்வையிட்டு குத்து விளக்கேற்றினார்.

இதேபோல் பேராவூரணி ஒன்றியம், கூப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடத்தை பார்வையிட்டு குத்து விளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், நகரச் செயலாளர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story