ஜெயலலிதாவின் திட்டங்களை நிறுத்தியவர் ஸ்டாலின் - முன்னாள் அமைச்சர்

ஜெயலலிதாவின் திட்டங்களை நிறுத்தியவர் ஸ்டாலின் - முன்னாள்  அமைச்சர்

தேர்தல் பிரச்சாரம் 

மறைந்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆட்சி காலத் தில் கொண்டு தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது என முன்னாள் அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.

சமயபுரம் அருகே பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சிவபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திமுகவின் சர்வாதிகாரியாக அமைச்சர் நேரு இருந்து வருகிறார். தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சி காலத்தில், 10 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது. மறைந்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆட்சி காலத் தில் கொண்டு தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது. திமுக ஆட்சியில்பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, மீண்டும் நல்லாட்சி மலர பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை வெற்றி பெறசெய்ய வேண்டும்" என்றார்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் ஓட்டு சேகரித்தார். வேட்பாளர் சந்திரமோகன் பேசியது; சமயபுரம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகள் எனக்கு நன்றாக தெரியும். கோரிக்கைகளை பரிசீலனை செய்து, பார்லிமென்ட்டில்பேசி நிறைவேற்றுவேன் என்றார். அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் அமைச்சருமான மு.பரஞ்சோதி,முன் னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதாளி, மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வடிவேல், முன்னாள் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ராமு உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Read MoreRead Less
Next Story