கூத்தூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை

கூத்தூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் 

சமயபுரம் அருகே கூத்தூரில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை எம்எல்ஏ கதிரவன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக முழுவதும் திண்ணை பிரச்சாரங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொது மக்களிடையே எடுத்துரைத்து வருகின்றனர்.

அதில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச பயண பேருந்து திட்டம், பள்ளி குழந்தைகள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களில் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், கொரோனா நிவாரண நிதி, மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற பல திட்டங்களையும், 2024 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள் பற்றியும் பொதுமக்களிடையே எடுத்துரைத்து வருகின்றனர்.

அதன்படி மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் தலைமையில் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்கிற தி.மு.க.வினர் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார் . மேலும் இப்பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு விரைவில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்தார் ‌ ‌ இந்நிகழ்வில் கூத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஒன்றிய கவுன்சிலர் அம்பிகாபதி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story