முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் பிறந்த 12 குழந்தைகளுக்கு எம்.பி. ராஜேஸ்குமாா் தங்க மோதிரங்களை வழங்கினாா்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71–வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story