ஈரோடு கரூர், நாமக்கல் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம்

ஈரோடு  கரூர், நாமக்கல் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர்  பிரச்சாரம்

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 

ஈரோடு அருகே சின்னியம்பாளையத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு ஈரோடு, நாமக்கல், கரூர் மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாசிதத்தை வீழ்த்த இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார். நாற்பதும் நமதே ! நாடும் நமதே என்ற ஈரோடு , கரூர் , நாமக்கல் பாராளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு வேட்பாளர் கே.இ.பிரகாஷ் , கரூர் வேட்பாளர் ஜோதிமணி நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அமைச்சர்கள் , சு.முத்துசாமி , மு.பெ.சாமிநாதன் மதிவேந்தன் , கயல்விழி செல்வராஜ் , சக்ரபாணி , அன்பில் மகேஷ் பொய்யாமொழி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் , காங்கிரஸ் மூத்த தலைவர் EVKS இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story