முதல்வர் பொதுக்கூட்டம் - அமைச்சர் ஆய்வு

தர்மபுரியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை வேளாண்மை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.

இந்திய கூட்டணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி,தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள தடங்கம் ஊராட்சி பகுதியில் இன்று தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் ஆ மணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வரின் பொதுக் கூட்டத்திற்காக பந்தல் அமைக்கும் பணியினை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்ரமணி Ex MLA, பி பழனியப்பன் மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மதியழகன் MLA, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பார் இளங்கோவன் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story