சிவகாசியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை

சிவகாசியில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை

பிரச்சாரம் 

சிவகாசி ஒன்றிய பகுதியில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி திமுகவினர் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றிய திமுக சார்பாக "இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்" என்ற திண்ணை பிரசாரம் ரிசர்வ்லயனில் நடைபெற்றது. சிவகாசி ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான விவேகன்ராஜ் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் அக்னிவீர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திலீபன்மஞ்சுநாத், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் பிரவீன்,மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ், ஒன்றிய அவைத் தலைவர் சாகுல்ஹமீது, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அந்தோணிராஜ் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடுவீடாக விநியோகம் செய்தனர். அப்போது தி.மு.க. அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகள்,பட்ஜெட்டில் பெண்கள் முன்னேற்றத்துக்காக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள்,மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும்,பேரிடர் கால நிதியை தராமல் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருவதையும் திமுகவினர் பொதுமக்கள் மத்தியில் எடுத்து கூறினர்.

Tags

Read MoreRead Less
Next Story