திருப்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

திருப்பூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புகை சீட்டுகளை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்.

தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இந்த முகாம் நடந்து வருகிறது. பொதுமக்களும் தங்களது கோரிக்கைகளை ஒரே இடத்தில் மனுவாக கொடுத்து வருகிறார்கள். இந்த மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் 1வது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 25க்கு உட்பட்ட அம்மன் கலையரங்கம், 4வது மண்டலம் வார்டு எண் 52க்கு உட்பட்ட ராமசாமி முத்தம்மாள் கல்யாண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ-. கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர் மின்னல் நாகராஜ், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story