விக்கிரவாண்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

விக்கிரவாண்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்டம் 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு கலால் உதவி ஆணையர் முருகேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ் ணன், உதவி இயக்குனர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் ஷேக் லத்தீப் வரவேற்றார். முகாமில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி கலந்து கொண்டு, விக்கிரவாண்டி பேரூராட்சியை சேர்ந்த 15-வது வார்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ஒருங்கிணைப்பாளர் ஆதி சக்தி சிவக்குமரி மன்னன், செயல் அலுவலர் அண்ணாதுரை, தாசில்தார் யுவராஜ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வட்ட வழங்கல் அலுவலர் விமல் ராஜ், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், துணை தலைவர் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, இளநிலை உத வியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம், கவுன்சிலர்கள் ரமேஷ், கனகா, ரேவதி, சுதா, சுபா, வெண்ணிலா, பிரியா உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story