திருவள்ளூரில் மக்களுடன் முதல்வா் திட்டம்

திருவள்ளூரில் மக்களுடன் முதல்வா் திட்டம்

 மக்களுடன் முதல்வா் திட்டம் 

திருவள்ளூா் நகராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்டம் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் கடந்த வாரம் தொடங்கியது. தொடா்ந்து இந்த மாத இறுதி வரை நடைபெற உள்ளது. இதில், திருவள்ளூா் நகராட்சியில் 27 வாா்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் தலைமை வகித்தாா். இதில், ஆணையா் டி.வி.சுபாஷினி, துணைத் தலைவா் சி.சு.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் முகாமை தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து 13 துறைகளைச் சோ்ந்த அலுவலா்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். இந்த முகாமில் அளிக்கப்படும் மனுக்களை 30 நாள்களில் பரிசீலனை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன. பின்னா் மனுக்களை பரிசீலனை செய்து, உடனே 5 பேருக்கு பட்டா, பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டையில் பெயா் மாற்றம் உள்ளிட்ட ஆவணங்களையும் எம்எல்ஏ வழங்கினாா். நகராட்சிப் பொறியாளா் நடராஜன், உதவி பொறியாளா் சரவணன், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளா்கள் பி.கே.நாகராஜ்(வழக்குரைஞா் அணி), வி.எஸ்.நேதாஜி(வா்த்தக அணி), ஜெயகிருஷ்ணா(அயலக அணி), முன்னாள் நகா்மன்ற தலைவா் பொன்.பாண்டியன், நகர அவைத் தலைவா் கமலக்கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளா் காஞ்சிப்பாடி சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் அயூப் அலி, அருணா ஜெயகிருஷ்ணா, டி.கே.பாபு, பிரபாகரன், தாமஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story